“ Button “பொத்தான்கள் .
நமது ஆடைகளில் பொத்தான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் ,சிறப்பிடம் பிடிக்கின்றன. அந்த வகையில் பொத்தான்கள் கடந்து வந்த வரலாறு பொத்தான்களின் பயன்பாடு கி.மு. 300-ம் ஆண்டுகளில் இருந்து தொடங்கிவிட்டது. 13-ம் நூற்றாண்டுவரை துளை இல்லாத பொத்தான்களே பயன் படுத்தப்பட்டு வந்தன.
பொத்தான்கள் பணக்கார மக்கள் பயன்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மக்களுடைய பயன் பாட்டுக்கும் வந்தது.பிரான்சிஸ் என்ற மன்னன் தனது சட்டையில் 13 ஆயிரத்து 600 தங்க பொத்தான்கள்அடங்கிய ஆடை உடுத்தியதாக குறிப்பு உள்ளது.படைவீரர்களின் சீருடையில் அரசன், அரசியின் உருவம் இடம் பெற்ற பொத்தான்கள் இருந்தன.
தொழிற்புரட்சிக்கு பின்னர் இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் பொத்தான்கள் தயாரிக்கப்பட்டன. முதன் முதலில் பொத்தான்களை இங்கிலாந்தைசேர்ந்த மேத்யூ பவுல்டன் என்பவர் தான் இயந்திரத்தில் தயாரித்தார்.
0
Leave a Reply